உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திரிசூலம் ரயில் நிலைய சுரங்க பாதையில் மழைநீர்

திரிசூலம் ரயில் நிலைய சுரங்க பாதையில் மழைநீர்

சென்னை, சென்னை விமான நிலையத்தையும், திரிசூலம் ரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் சுரங்கப்பாதை உள்ளது. மக்கள் பயன்பாடு அதிகம் என்பதால், இந்த சுரங்கப்பாதையில் எப்போதும் கூட்டம் அதிகமாகவே காணப்படும். விமான நிலைய மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மிக அருகில் இருப்பதால், தாம்பரம் செல்லும் ஜி.எஸ்.டி., சாலை வழியாக வந்து, இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், பெஞ்சல் புயல் காரணமாக, கடந்த சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. அப்போது, இந்த சுரங்கப்பாதையில் மழைநீர் சூழ்ந்தது.சில நாட்கள் கடந்தும், சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், ஆபத்தான முறையில் சாலையை கடந்து, விமான நிலையம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், இந்த பிரச்னையை சரி செய்ய எந்த முயற்சியும் எடுப்பதில்லை. மழைநீர் வெளியேற்றுவதற்கு மின் மோட்டார் இருந்தும் பயன்படுத்தாமல் அதிகாரிகள் அலைக்கழிப்பதாக, பயணியர் புகார் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி