உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழை நீர்

குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழை நீர்

சென்னை ஈஞ்சம்பாக்கம் செல்வா நகர் விரிவு பிராத்தனை 2வது தெருவில், இரவில் பெய்த மழையில் அப்பகுதி முழுவதும் குளம் ஏரி போல் மழை நீர் தேங்கி நிற்கிறது. கால்வாய் போடுவதாக உறுதி அளித்த மாநகராட்சி ஊழியர்கள் பணியை முடிக்க தாமதம் செய்கின்றனர். இதனால் தேங்கும் நீரால் அப்பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு வாசிகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். மேலும் டெங்கு, மலேரியா வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம் உருவாகி உள்ளது. பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். மாநகராட்சி உடனடியாக அப்பகுதியில் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்குமா ?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை