உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கேலோ இந்தியா போட்டி பிரபலப்படுத்த பேரணி

கேலோ இந்தியா போட்டி பிரபலப்படுத்த பேரணி

சென்னை:விளையாட்டுத் துறையில், இளம் வீரர்களின் திறமையை மேம்படுத்தும் நோக்கில், 'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகளை, மத்திய அரசு நடத்தி வருகிறது.அதன்படி, ஆறாவது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், ஜன., 19ல் துவங்கி 31ல் முடிகின்றன.இப்போட்டிகளை, தமிழகம் முழுதும் பிரபலப்படுத்தும் விதமாக, ஆறு விளம்பர வாகனங்கள், 5ம் தேதி முதல், அனைத்து மாவட்டங்களிலும் சுற்றி வருகின்றன.நேற்று, சென்னை கலங்கரை விளக்கம் முதல் பெசன்ட் நகர் கடற்கரை சென்று திரும்பும்படி, 15 கி.மீ., துாரத்திற்கு சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.இதில், தேசிய சைக்கிள் பந்தய வீரர்கள் ஜோயல் சுந்தரம், வசந்த், சசி ஆகியோர் உட்பட, 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ