மேலும் செய்திகள்
ஏப்., 12 ல் ரேஷன் குறைதீர் கூட்டம்
09-Apr-2025
சென்னை, தமிழகத்தில் பொது வினியோக திட்ட பயன்களை ரேஷன் கார்டுதாரர்கள் எளிதில் பெற, உணவு வழங்கல் துறை சார்பில் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை, ரேஷன் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது.அதன்படி, இம்மாதத்திற்கான முகாம், சென்னையில் 19 மண்டல உணவு வழங்கல் உதவி கமிஷனர் அலுவலகங்களில் வரும் 10ம் தேதி நடக்கிறது. காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும் முகாமில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் அங்கீகார சான்று உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ரேஷன் கடை மற்றும் தனியார் அங்காடிகளில் விற்கப்படும் பொருட்கள், சேவைகள் தொடர்பாகவும் மக்கள், அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம். இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளுமாறு, உணவு வழங்கல் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
09-Apr-2025