ரூ.35 லட்சம் மதிப்பில் நடைபாதை புனரமைப்பு
சென்னை :தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில், நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலையில், ஏற்கனவே அமைக்கப்பட்ட நடைபாதை, மிகவும் சிதிலமடைந்து, பாதசாரிகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது.இதனால், வேறு வழியின்றி பாதசாரிகள் சாலையில் விபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில், ஒவ்வொரு நாளும் கடந்து வந்தனர்.இதை அறிந்த மாநகராட்சி அதிகாரிகள், 1,500 மீட்டர் நீளமுள்ள சிதிலமடைந்த நடைபாதையை புனரமைக்க, 35 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினர்.தற்போது, புனரமைப்பு பணிகளை மாநகராட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். இம்மாத இறுதிக்குள் பணிகள் முழுதும் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.