மேலும் செய்திகள்
ஆவடி அருகே ரயில் மோதி முதியவர் உயிரிழப்பு
04-Feb-2025
மீஞ்சூர், புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் அசோக்குமார், 38. இவர், கடந்த 15ம் தேதி, மீஞ்சூரில் நண்பரின் மகன் திருமணத்திற்கு சென்றுள்ளார்.ஆனால் வீடு திரும்பவில்லை. அவரது மொபைல் போன், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. மீஞ்சூர் போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை மீஞ்சூர் பேருந்து நிலையம் அருகே, சாலையோர கால்வாயில் ஆண் சடலம் கிடப்பதாக, துாய்மை பணியாளர்கள் வாயிலாக மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு, விசாரணை மேற்கொண்டதில், காணாமல் போன அசோக்குமார் என்பது தெரிந்தது. இதையடுத்து உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். திருமணத்திற்கு சென்றவர் இறப்பில் உள்ள மர்மம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
04-Feb-2025