உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  செஞ்சிலுவை சங்க தேர்தல் டிச., 20ல் ஓட்டுப்பதிவு

 செஞ்சிலுவை சங்க தேர்தல் டிச., 20ல் ஓட்டுப்பதிவு

சென்னை, 'இந்திய செஞ்சிலுவை சங்கத்தின், சென்னை மாவட்ட கிளை நிர்வாகிகள் தேர்தல், டிச., 20ல் நடத்தப்படும்' என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். அ வர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: செஞ்சிலுவை சங்கத்தின் சென்னை மாவட்ட கிளை நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் டிச., 1, 2ல், காலை 11:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை நடைபெறும் . சென்னை கலெக்டர் அலுவலகத்தின், 4வது தளத்தில் உள்ள நேர்முக உதவியாளர் அறையில், மனு தாக்கல் செய்யலாம். வேட்பாளர்கள் பட்டியல், டிச., 3ல் வெளியிடப்படும். வேட்பு மனுக்கள் ஆய்வு, 4ம் தேதி நடக்கும். மனுக்களை, 5ம் தேதி திரும்ப பெறலாம். வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல், 8ம் தேதி வெளியிடப்படும். டிச., 20ல், வில்லிவாக்கம் சிங்காரம் பிள்ளை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடி மையத்தில், காலை 8:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை வாக்காளர்கள் ஓட்டு போடலாம். ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஓட்டு எண்ணிக்கை துவங்கி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ