உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுமியை கர்ப்பமாக்கிய உறவுக்கார வாலிபர் கைது

சிறுமியை கர்ப்பமாக்கிய உறவுக்கார வாலிபர் கைது

வியாசர்பாடி, வியாசர்பாடியைச் சேர்ந்தவர், 16 வயது சிறுமி. பிளஸ் 1 படிக்கிறார். நேற்று முன்தினம், வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார்.உடனடியாக அவரின் பெற்றோர், சிறுமியை அழைத்துக் கொண்டு, ராயபுரம் தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர், அவர் மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். இதை கேட்டு, பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.இது குறித்து, மருத்துவமனை நிர்வாகம் தரப்பில், எம்.கே.பி., நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவலறிந்த மகளிர் போலீசார், சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது, உறவினரான புளியந்தோப்பைச் சேர்ந்த கோகுல், 20, என்பவர், சிறுமியை காதலித்ததும், ஆசை வார்த்தை கூறி, பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதும் தெரிந்தது.இதையடுத்து, நேற்று வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், விசாரணைக்கு பின், கோகுலை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ