மேலும் செய்திகள்
சாலை விபத்தில் மூதாட்டி பலி
17-Jun-2025
செய்யூர் வாலிபரை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்று, கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த அம்மனுார் கிராமத்தைச் சேர்ந்த தருமன் மகன் சுபாஷ், 25. இவரது உறவினர், அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை மகன் சுரேந்தர், 27.நேற்று முன்தினம் நள்ளிரவு, சுபாஷ் வீட்டிற்கு சென்ற சுரேந்தர், இருசக்கர வாகனத்தில் அவரை செய்யூர் அழைத்து சென்றார். சுபாஷ் பைக்கை ஓட்டினார்.பின்னால் அமர்ந்திருந்த சுரேந்தர், அம்மனுார் ஆத்திக்குட்டை அருகே, தான் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் சுபாஷ் கழுத்தை கொடூரமாக அறுத்துள்ளார்.கட்டுப்பாட்டை இழந்த வாகனத்தில் இருந்து இருவரும் விழுந்தனர். ரத்தவெள்ளத்தில் இறந்து போன சுபாஷ் உடலை, அங்கேயே விட்டு விட்டு சுரேந்தர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.சுபாஷ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், பெற்றோர் அவரை தேடிச் சென்றனர்.ஆத்திக்குட்டை சாலையில் கழுத்தறுக்கப்பட்டு, உயிரிழந்த நிலையில் சுபாஷ் சடலமாக கிடப்பதாக போலீசார் மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. செய்யூர் போலீசார், சுபாஷ் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.பின், வீட்டில் பதுங்கி இருந்த சுரேந்தரை, நேற்று மாலை போலீசார் கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
17-Jun-2025