உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆக்கிரமிப்பு கடை அகற்றம்

ஆக்கிரமிப்பு கடை அகற்றம்

அண்ணா சாலை: சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில் போக்கு வரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதில், எல்.ஐ.சி., முதல் தர்கா வரையிலான அண்ணா சாலையில் இருபுறமும், நடமாடும் வாகனங்களில் செயல்படும் சிற்றுண்டி கடைகள், கார்களுக்கான வாசனை திரவியங்கள், 'ஹோம் மேட்' சாக்லெட் விற்பனை செய்யும் கடைகளாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க, போக்குவரத்து இணை கமிஷனர் விஜயகுமார் தலைமையிலான போலீசார், இப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக வைத்திருந்த எட்டு கடைகளை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !