உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடைபாதை ஆக்கிரமிப்புகள் கே.கே., நகரில் அகற்றம்

நடைபாதை ஆக்கிரமிப்புகள் கே.கே., நகரில் அகற்றம்

கே.கே., நகர், அசோக் நகர் மற்றும் கே.கே., நகர் பகுதிகளை இணைக்கும் பிரதான சாலையாக கே.கே., நகர் காமராஜர் சாலை உள்ளது. இச்சாலையில், தனியார் பள்ளி, சர்ச் உள்ளிட்டவை அமைந்துள்ளன.இச்சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதைகளில், ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வந்தன. அத்துடன் சில கடைகள், நடைபாதை வரை கடைகளை விரிவாக்கம் செய்திருந்தன. நடைபாதையில் ஜல்லிக்கற்கள் மற்றும் செங்கல் குவித்தும் விற்பனை செய்யப்பட்டன.இதுகுறித்து எழுந்த தொடர் புகாரையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று, பாப்காட் இயந்திரம் வாயிலாக, ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.இதில், 20க்கும் மேற்பட்ட நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கடையின் தள்ளுவண்டி, தகர ஷீட் உள்ளிட்டவையும், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தனியார் சிமென்ட் கலவை வாகனங்களும் அகற்றப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.இதேபோல், இரு நாட்களுக்கு முன், அசோக் பில்லர் சாலையில் இருந்த நடைபாதை கடைகள் அகற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ