21ல் சித்த மருத்துவ கருத்தரங்கம் பங்கேற்க முன்பதிவு அவசியம்
சென்னை, உலக யோகா தினத்தையொட்டி, மயிலாப்பூரில் உள்ள, சித்த மருத்துவர் கு.சிவராமனின், ஆரோக்கியா சித்த மருத்துவமனை சார்பில், உடல் நலத்துக்கான யோகா மற்றும் சித்த மருத்துவக் கருத்தரங்கம், வரும் 21ம் தேதி நடக்க உள்ளது.மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் வளாகத்தில், 'யோகாவும் உடல் நலமும்' என்ற தலைப்பில் நடக்க உள்ள கருத்தரங்கில், தொற்றா வாழ்வியல் நோய்களான சர்க்கரை நோய், புற்றுநோய் உள்ளிட்டவற்றை தடுக்கும் யோகாசனங்களை செய்வது, உணவு பழக்கங்களில் செய்ய வேண்டிய மாறுதல்கள், வாழ்வியல் முறைகள் குறித்து விளக்கப்படுகிறது.சேலம் வசிஷ்டா யோகா நிலையத்தைச் சேர்ந்த, யோகா பயிற்சி நிபுணர் வெற்றிவேந்தன், யோகா, மூச்சு பயிற்சி உள்ளிட்டவற்றை செயல் விளக்கத்துடன் கற்றுத்தர உள்ளார். சித்த மருத்துவர் கு.சிவராமன், நல்வாழ்வுக்கான உணவு முறைகள், சித்த மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து பேச உள்ளார். இதில் பங்கேற்க 300 பேருக்கு மட்டுமே அனுமதி. எனவே, 96771 17175, 98404 61005 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது 'வாட்ஸாப்' வழியே, முன்பதிவு செய்யலாம். கட்டணம் கிடையாது.