உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை சீரமைக்க குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கு உத்தரவு

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை சீரமைக்க குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கு உத்தரவு

சென்னை, சென்னை மாநகராட்சியில், 9 லட்சம் குடியிருப்புகள் உட்பட, 12 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் உள்ளன.கோடை காலத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைவதை தடுக்கும் வகையில், அனைத்து கட்டடங்களிலும் நிலத்தடி நீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்த வேண்டும்.சென்னை மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணைந்து கண்காணித்து வருகின்றன.கடந்த, 2017, 2018, 2019ம் ஆண்டுகளில் ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறையை தொடர்ந்து, சென்னையில் உள்ள கட்டடங்களில் நிலத்தடி நீர் சேகரிப்பு திட்டம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.அடுத்தடுத்த ஆண்டுகளில், கோடைகாலத்தில் பெரிய அளவில் நீர் பற்றாக்குறை ஏற்படாததாலும், கொரோனா காலம் என்பதாலும், மழைநீர் சேகரிப்பு கண்காணிப்பு திட்டத்தில் அதிகாரிகள்கவனம் செலுத்தவில்லை.இந்நிலையில், மழைநீர் சேகரிப்பு திட்டம், மழை மற்றும் கோடை என, இரண்டு காலத்திலும் பயன்தரக்கூடியதாக இருப்பதால், இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்தது.அதன்படி, அடுக்குமாடி குடியிருப்புகளில் சேதமடைந்துள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீரமைக்க, அனைத்து குடியிருப்போர் நலச்சங்கத்தினருக்கும் மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.மேலும், தனிநபர் குடியிருப்புகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு குறித்து கண்காணிக்கவும், மாநகராட்சி முடிவு செய்துள்ளது.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மாநகராட்சியில், நான்கு ஆண்டுகளாக, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு குறித்து அதிகாரிகள் பெரியதாக கண்காணிக்கவில்லை.தற்போது, மாநகராட்சியில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில், சேதமடைந்த மழைநீர் கட்டமைப்புகளை சீரமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதற்கான கால அவகாசத்திற்கு பின், நேரில் ஆய்வு செய்யப்படும். சீரமைக்காத குடியிருப்புகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை