வருவாய் மாவட்ட கோ - கோ ஆவிச்சி பள்ளி முதலிடம்
சென்னை: வருவாய் மாவட்ட அளவிலான கோ - கோ போட்டி, 17 வயது பிரிவில், விருகம்பாக்கம் ஆவிச்சி பள்ளி முதலிடத்தை கைப்பற்றியது. பள்ளிக்கல்வித்துறை சார்பில், வருவாய் மாவட்ட அளவிலான கோ - கோ போட்டி, செயின்ட் ஜார்ஜ் பள்ளி சார்பில், கீழ்ப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடந்தது.இதில், 17, 19 வயது பிரிவுகளில், தனித்தனியாக போட்டிகள் நடத்தப் பட்டன. ஒவ்வொரு பிரிவிலும், 23 அணிகள் பங்கேற்றன. இதில், 17 வயது மாணவர் பிரிவில், அனைத்து போட்டிகள் முடிவில், விருகம்பாக்கம் ஆவிச்சி பள்ளி மற்றும் பி.ஏ.கே., பழனிசாமி பள்ளி அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றன. விறுவிறுப்பான ஆட்டத்தில், ஆவிச்சி பள்ளி, 13 - 5 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, முதலிடத்தை கைப்பற்றியது. மேலும், மாநில போட்டிக்கு தேர்வாகியது. மூன்றாம் இடத்தை, வேலம்மாள் பள்ளி வென்றது. அதேபோல், 19 வயது பிரிவில் வேலம்மாள் பள்ளி முதலிடத்தையும், அடையார் ஸ்ரீசங்கரா பள்ளி இரண்டாமிடத்தையும், ஆவிச்சி பள்ளி மூன்றாம் இடத்தையும் கைப்பற்றின.