உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆர்.எம்., தியாகி பொறுப்பேற்பு

ஆர்.எம்., தியாகி பொறுப்பேற்பு

சென்னை, மத்திய அரசின் மின்சார அமைச்சகத்தின் கீழ், பொதுத்துறை நிறுவனமான 'பவர்கிரிட் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட்' இயங்குகிறது. இதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக, ரவீந்திர குமார் தியாகி நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.இவர் இதற்கு முன், இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் இயக்குனர் மற்றும் மின் துறையில் 33 ஆண்டுக்கும் மேல் பணியாற்றி உள்ளார்.சொத்து மேலாண்மை, பொறியியல், டெலிகாம் போன்ற பவர்கிரிடின் பல்வேறு வணிக பகுதிகளிலும், பவர்கிரிடின் வடகிழக்கு மண்டல தலைவராகவும் இருந்து, பல்துறை பணிகளை கையாண்டுள்ளார்.சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லுாரியில் பி.இ.சி., மின் பொறியாளர் மற்றும் எம்.டெக்., ஐ.ஐ.டி., டெல்லியில் எரிசக்தி படித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை