மேலும் செய்திகள்
ஷட்டரை வெட்டி டாஸ்மாக் கடையில் திருட்டு
10-Dec-2024
ஆவடி,ஆவடி அடுத்த சேக்காடு, தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் சரவணன், 45. இவர், கடந்த ஏழு ஆண்டுகளாக, சேக்காடு, சி.டி.எச்., சாலையில் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார்.நேற்று காலை, கடையில் பணிபுரியும் டிரைவர் மோகன்ராஜ் என்பவர் கடையை திறக்க வந்த போது, ஆள் உள்ளே செல்லும் அளவுக்கு, கடையின் ஷட்டர் வெட்டி எடுக்கப்பட்டு இருந்தது.உள்ளே சென்று பார்த்த போது, கல்லாவில் வைத்திருந்த 80,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது.ஆவடி போலீசார், அங்குள்ள 'சிசிடிவி' காட்சியை ஆய்வு செய்த போது, நேற்று நள்ளிரவு 12:05 மணிக்கு, 'மாஸ்க்' அணிந்து வந்த மர்ம நபர், காஸ் கட்டர் வாயிலாக ஷட்டரை வெட்டி, உள்ளே சென்று வருவது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
10-Dec-2024