உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மியாட் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை

மியாட் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை

சென்னை, சென்னை, மியாட் சர்வதேச மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சையை, சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார்.ரோபோட்டிக் அறுவை சிகிச்சை முறைகள் குறித்து மியாட் மருத்துவர்கள் செந்தில்குமார், மணிகண்டன் பெருங்கோ ஆகியோர் கூறியதாவது:ரோபோடிக் வாயிலாக, 140 வகையான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள முடியும். அக்கருவியின் மேம்பட்ட அல்ட்ராசவுண்ட் அமைப்பு, தெளிவான படங்களை அனைத்து கோணங்களிலும் முழு ரோபோ அசைவுடன் படம் பிடிக்கிறது. மார்பு மற்றும் வயிற்று பகுதியில் உள்ள அனைத்து பெரிய புற்றுநோய்கள், உணவுக்குழாய், வயிறு மற்றும் பெருங்குடல் அறுவை சிகிச்சைகள், சிறுநீரகம், பேரியாட்ரிக், நுரையீரல், கருப்பை நீக்கம், தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சைகள், குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. திறந்த அறுவை சிகிச்சையில் ஏற்படும் பெரிய, நீண்ட கால வடு, வலி இதில் இல்லை. அறுவை சிகிச்சைக்கு பின் ஏற்படும் அசவுகரியத்தையும் குறைக்கிறது.ரோபோட்டிக் அறுவை சிகிச்சை வாயிலாக மருத்துவ செலவும், கட்டணமும் சாதாரண அறுவை சிகிச்சையை விட மிகவும் குறைந்தது. இந்த சிகிச்சை முறைக்கு அனைத்து விதமான மருத்துவ காப்பீடுகளிலும் பயன் பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ