ரோபோட்டிக் சிகிச்சை திட்டம் அப்பல்லோவில் துவக்கம்
சென்னை: அப்பல்லோ மருத்துவமனை சார்பில், அப்பல்லோ சர்வதேச கொலோரெக்டல் கருத்தரங்கம் சமீபத்தில் நடந்தது. இதில், சர்வதேச நாடுகளைச் சேர்ந்த முன்னணி அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்றனர். கருத்தரங்கில் குடல் மருத்துவ பராமரிப்பின் வேகமான வளர்ச்சி குறித்தும், ரோபோட்டிக் அறுவை சிகிச்சை, டிஜிட்டல் அறுவை சிகிச்சை தளங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கருத்தரங்கில் முக்கிய அம்சமாக, சென்னையில் உள்ள அப்பல்லோ புரோட்டான் கேன்சர் சென்டரில், சிக்கலான மலக்குடல் புற்று நோய்களைக் கையாள வசதியாக, ரோபோட்டிக் அறுவை சிகிச்சை மற்றும் டெலிசர்ஜரி என்ற ஏ.ஆர்.சி., என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.