உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரோட்டரி கிளப் ஆண்டு விழா விளையாட்டு வீரர்களுக்கு விருது

ரோட்டரி கிளப் ஆண்டு விழா விளையாட்டு வீரர்களுக்கு விருது

சென்னை,ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் தி.நகரின் ஆண்டு விழா, சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆண்டு மலர் வெளியிடப்பட்டதுடன், இருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.அதன்படி, டென்னிஸ் வீரர் ஸ்ரீனிவாசன் வாசுதேவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, கோல்ப் வீரர் ஜெயனன் எஸ்.சடகோபாலுக்கு, தொழில் முனைவு மற்றும் சமூக சேவை விருதை, சர்வதேச டென்னிஸ் அமைப்பைச் சேர்ந்த விஜய் அமிர்தராஜ் வழங்கினார்.மேலும், ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் தி.நகரின், 2025ம் ஆண்டிற்கான தலைவராக பிரவீன் தலகுலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை, தற்போதைய தலைவர் நரேந்திர ஸ்ரீஸ்ரீமல் அறிவித்தார்.'ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் தி.நகர்' சார்பில், தலைசிறந்த விளையாட்டு வீரர்களை கவுரவிக்கும் வகையில், விருது வழங்கும் விழா, தி.நகரில் நேற்று நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ், கோல்ப் வீரர் ஜெயனன் சடகோபாலுக்கு தொழில் முனைவு மற்றும் சமூக சேவகர் விருது, டென்னிஸ் வீரர் சீனிவாசன் வாசுதேவனுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி