உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கஞ்சா விற்ற ரவுடிகள் கைது

கஞ்சா விற்ற ரவுடிகள் கைது

ஓட்டேரி: அயனாவரம் பகுதியில், புளியந்தோப்பு துணை கமிஷனரின் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்த ஓட்டேரியைச் சேர்ந்த அருண், 35, புளியந்தோப்பைச் சேர்ந்த நாகராஜன், 40, ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம், ஒரு கிலோ கஞ்சா, கத்தி, 2,500 ரூபாய் உள்ளிட்டவை இருப்பது தெரிந்தது. தனிப்படை போலீசார் இருவரையும் பிடித்து, ஓட்டேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிந்து, சிறையில் அடைத்தனர். அருண் மீது அடிதடி உட்பட ஒன்பது வழக்குகளும், நாகராஜன் மீது மூன்று வழக்குகளும் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை