மக்களுக்கு அச்சுறுத்தல் ரவுடிகள் கைது
பேசின் பாலம்: கே.பி., பார்க் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பில் ஈடுபட்ட, புளியந்தோப்பு குருசாமி நகரைrf சேர்ந்த டேவிட் பிரசாந்த், 23, டைசன் பிரசாந்த், 26 ஆகியோரை, பேசின் பாலம் போலீசார் நேற்று கைது செய்தனர். அதேபோல, சிவராஜபுரம் பகுதியில் மது போதையில் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்த, அதே பகுதியைச் சேர்ந்த இளஞ்செழியன், 21 என்பவரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.