கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது
எம்.கே.பி.நகர்:சென்னை, வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரில், குடிபோதையில் ரவுடி ஒருவர் பொதுமக்களை கத்தியை காட்டி அச்சுறுத்தும் வகையில் செயல்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர், 51வது பிளாக் பகுதியில் சோதனை மேற்கொண்ட போது, குடிபோதையில் அப்பகுதி மக்களை கத்தியை காட்டி மிரட்டி பணப்பறிப்பில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த 'பாட்டில்' சூர்யாவை, 24 நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.