மேலும் செய்திகள்
தலைமறைவு குற்றவாளி சிக்கினார்
06-Dec-2024
குட்கா விற்றவர் சிக்கினார்
09-Dec-2024
புளியந்தோப்பு:புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் முபீனா, 42. இவர், புளியந்தோப்பு மார்த்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பவானி என்பவரிடம், 40,000 ரூபாய் வட்டிக்கு வாங்கியுள்ளார்.சிறு, சிறு தவணைகளாக, வாங்கிய பணத்தை முபீனா கட்டி வந்துள்ளார். ஆனால், பவானி கூடுதல் வட்டி கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. கூடுதல் வட்டியை கட்ட முடியாது என, முபீனா மறுத்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த பவானி, சரித்திர பதிவேடு குற்றவாளியான, தன் கணவர் ராகுல், 28, வாயிலாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த முபீனா, புளியந்தோப்பு போலீசில் புகார் அளித்தார்.அதன்படி வழக்கு பதிந்த புளியந்தோப்பு போலீசார், விசாரணைக்கு பின், ராகுலை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று மாலை சிறையில் அடைத்தனர். தலைமறைவான பவானியை தேடி வருகின்றனர்.ரவுடியான ராகுல் மீது, பல்வேறு காவல் நிலையங்களில், 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
06-Dec-2024
09-Dec-2024