பெண்ணை கொல்ல முயற்சி ரவுடி கைது; இருவருக்கு வலை
ஆர்.கே.நகர்:சென்னை, தண்டையார்பேட்டை, சிவாஜி நகர் 7வது தெருவை சேர்ந்தவர் காயத்ரி, 25.கடந்த ஜன., 2ம் தேதி இரவு, சிவாஜி நகர் பிரதான சாலையில், காயத்ரி, அவரது தம்பி மனைவி சரண்யா மற்றும் அவரது தாயார் முத்து ஆகியோருடன் நின்று பேசிக் கொண்டிந்தார்.அப்போது அவ்வழியே வந்த மூவர் கும்பல், காயத்ரியை கத்தியால் வெட்டியது. தடுக்க வந்த சரண்யாவையும் வெட்டி விட்டு தப்பியது.அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து, ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.பின், முன்விரோதம் காரணமாக, கொலை முயற்சியில் ஈடுபட்ட தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ரவுடி கார்த்திக், 20, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.