மேலும் செய்திகள்
புழல் சிறையில் கஞ்சா பறிமுதல்
21-Oct-2024
புழல், ஓட்டேரி கே.எம்.கார்டன், 6வது தெருவைச் சேர்ந்த தயாளனின் மகன் தீபக், 30. கடந்த செப்டம்பரில், கஞ்சா வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு, 50 நாட்களுக்குப்பின் ஜாமினில் வெளியே வந்தார். சரித்திர குற்றவாளியான அவர் தன் இரண்டாவது மனைவி ஆயிஷாவுடன் தங்கி இருந்தார்.அங்கிருந்து, புழலில் உள்ள முதல் மனைவி சிவசங்கரியின் வீட்டிற்கு, நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு சென்றார். அங்கு, அதிகமாக மது குடித்துவிட்டு பேசிக் கொண்டிருந்த அவருக்கு, மாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே, கொளத்துார் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு, சிவசங்கரிஅழைத்துச் சென்றார். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே தீபக் உயிரிழந்தார்.இதுகுறித்து, புழல் போலீசார் வழக்கு பதிந்து, அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்தாரா அல்லது மதுவில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டாரா என்று விசாரித்து வருகின்றனர்.
21-Oct-2024