உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கர்ப்பிணியிடம் கத்திமுனையில் ரூ.1 லட்சம் பறிப்பு

கர்ப்பிணியிடம் கத்திமுனையில் ரூ.1 லட்சம் பறிப்பு

கொளத்துார்:பட்டாபிராம், ஜெகஜீவன்ராம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கனகதுர்கா, 29; ஏழு மாத கர்ப்பிணி. இவரது தந்தை ரவிசங்கர், நேற்று முன்தினம் உடல்நிலை சரியின்றி உயிரிழந்தார். இதையடுத்து, கொளத்துார், வேல்முருகன் நகரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.நேற்று மாலை இறுதிச்சடங்கு முடிந்த நிலையில் வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தபோது, 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர், வீட்டின் உள்ளே புகுந்து, கத்திமுனையில் கனகதுர்காவின் மாமியார் ராஜேஸ்வரி மற்றும் உறவினர் மலர்கொடியை, வீட்டின் அறையில் தள்ளி பூட்டிவிட்டு, கனகதுர்காவை கத்தி முனையில் மிரட்டி, 1 லட்ச ரூபாயை பையுடன் எடுத்து சென்றார்.மேலும், வீட்டில் இருந்த மூன்று மொபைல் போன்களையும் திருடிச் சென்றார். இது குறித்து, கொளத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி