உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.10 கோடி மதிப்பில் தங்கம் மோசடி தலைமறைவான இருவருக்கு வலை

ரூ.10 கோடி மதிப்பில் தங்கம் மோசடி தலைமறைவான இருவருக்கு வலை

சென்னை, சென்னையில், தங்கம் புதுப்பிக்கும் நிறுவனங்களை குறிவைத்து, மோசடியில் ஈடுபட்ட கும்பலைப் பிடிக்க, போலீசார் தீவீர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.சென்னை, அமைந்தகரையைச் சேர்ந்த ஆகாஷ், நகைக்கடைகளுக்கு பழைய தங்கத்தை புதுப்பித்து தரும் தொழில் செய்கிறார்.இவரிடம், புளியந்தோப்பைச் சேர்ந்த தீரேந்தர் சிங், பகவான் சிங் ஆகியோர், தொடர்ந்து பழைய தங்கத்தை கொடுத்து, புது தங்கம் வாங்கிச் சென்றனர். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம், தீரேந்தர் சிங் மற்றும் பகவான் சிங் ஆகிய இருவரும் 1,600 கிராம் சுத்த தங்கத்தை வாங்கிச் சென்று, அதற்குப் பதிலாக மாலையில், பழைய தங்கத்தை தருவதாக கூறி, பின் தலைமறைவாகினர்.இது குறித்து ஆகாஷ் புகாரின்படி வழக்குப் பதிவு செய்த போலீசார், தீரேந்தர் சிங், பகவான் சிங் இருவரையும் தேடிவந்தனர்.இந்நிலையில், அவர்கள் 15க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து 15,000 கிராமிற்கும் மேலாக, பழைய தங்கம் தருவதாக கூறி, சுத்த தங்கத்தை பெற்றுக்கொண்டு, ஏமாற்றிச் சென்றது தெரியவந்தது.தவிர, தீரேந்தர் சிங் மற்றும் பகவான் சிங் ஆகிய இருவரும், தாங்கள் வேலை பார்த்த நகைக்கடையில் இருந்தும் 2,000 கிராம் தங்கத்தை ஏமாற்றி எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.அவர்கள் இருவரும் ஏமாற்றி எடுத்துச் சென்ற தங்கத்தின் மதிப்பு 10 கோடி ரூபாய் என்பதால், சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு, வழக்கு மாற்றப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா மற்றும் மொபைல் போன் அழைப்புகள் வாயிலாக தலைமறைவான இருவரையும், போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை