மேலும் செய்திகள்
ரூ.1.40 கோடி நிலமோசடி காரம்பாக்கம் நபர் கைது
04-Dec-2024
ஆவடி, டகொளப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராமசாமி, 42. 2023ல், ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார்.அதில், கொளப்பாக்கம் கிராமம், ராதாகிருஷ்ணன் நகரில் 2,972 சதுர அடி நிலத்திற்கு 1.40 கோடி ரூபாய் விலை பேசி, அந்த பணத்தை ஹேமாசேஷனிடம் கொடுத்தேன்.நிலத்தில் பிரச்னை இருப்பதை அறிந்து, பணத்தை திருப்பி கேட்டேன். திருப்பி தராமல் ஏமாற்றிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.போலீசாரின் விசாரணையில், வழக்கறிஞர் பிரபாகரன், துரை சேபாலா, மேகநாதன் ஆகியோர் கூட்டு சேர்ந்து, ஜெயக்குமார் என்பவர் வாயிலாக ஆள்மாறாட்டம் செய்தது தெரிந்தது.இவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான, பெரியப்பாளையத்தைச் சேர்ந்த தணிகாசலம், 36, என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
04-Dec-2024