வைர வியாபாரியிடம் ரூ. 20 கோடி நகை பறிப்பு; 4 பேர் கைது
வடபழனி: அண்ணா நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர்; பிரபல வைர நகை வியாபாரி. இவருக்கு அறிமுகமான அருள்ராஜ் என்பவர், வைர நகைளை விற்று தருவதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் சந்திரசேகர் வீட்டிற்கு ராகுல் என்பவரை அழைத்து வந்த அருள்ராஜ், வைர நகைகளை பார்த்து விட்டு, அதற்கான விலையை பேரம் பேசி சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை வைர நகைகளை, வடபழனி, ஆற்காடு சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலுக்கு கொண்டு வரும்படியும், அங்கு வந்து வாங்கி கொள்வதாகவும் அருள்ராஜ் கூறியுள்ளார். அதன்படி, சந்திரசேகர் தன்னிடம் உள்ள 20 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகைகளுடன், நேற்று மாலை அந்த ஹோட்டலுக்கு சென்றார். அருள்ராஜ் தங்கி இருந்த அறையில், அவருடன் ராகுல், அசோக் என்பவர்களும் இருந்தனர். நகைகளை வாங்குவது போல், பாவனை காட்டியவர்கள், சிறிது நேரத்தில் சந்திரசேகரை தாக்கி, கட்டிப்போட்டு நகைளுடன் தப்பி சென்றனர்.சிறிது நேரம் கழித்து அறைக்குள் சென்ற ஹோட்டல் ஊழியர்கள், கட்டப்பட்ட நிலையில் இருந்த சந்திரசேகரை மீட்டனர். இது குறித்து, வடபழனி போலீசார் விசாரித்து வந்தனர்.லண்டன் ராஜன், அவரது நண்பர், உதவியாளர் என 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.