உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.26 லட்சம் கஞ்சா பறிமுதல்

ரூ.26 லட்சம் கஞ்சா பறிமுதல்

சென்னை: தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா, சென்னை விமான நிலையத்தில் சிக்கியது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து, இரு தினங்களுக்கு முன் தனியார் பயணியர் விமானம், சென்னை வந்தது. அதில் வந்திருந்த பயணியரிடம், சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கமான பரிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சுற்றுலா சென்று திரும்பிய தமிழக பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்படவே, அவரது உடைமைகளை சோதனை செய்ததில், பொட்டலங்களில் மறைத்து கஞ்சா கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் எடை 2.6 கிலோ, சர்வதேச மதிப்பு 26 லட்சம் ரூபாய். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை