உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குறுகலான தெருக்களை சீரமைக்க ரூ.3 கோடி

குறுகலான தெருக்களை சீரமைக்க ரூ.3 கோடி

கிண்டி கிண்டியில், மிகவும் குறுகலான, 17 தெருக்கள், பல ஆண்டுகளுக்கு பின் புதுப்பிக்கப்பட உள்ளன. அதற்காக, 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அடையாறு மண்டலம், 168வது வார்டு, கிண்டி, செட்டித்தோட்டம், கலைமகள் நகர், ஜோதி தோட்டம் உள்ளிட்ட, 17 தெருக்கள் குறுகலாக உள்ளன. இந்த தெருக்களில் சாலை வசதி அமைத்து, பல ஆண்டுகள் ஆகின்றன. இதையடுத்து, இந்த தெருக்களில் தார் மற்றும் சிமென்ட் சாலை அமைக்க, 3 கோடி ரூபாயை மாநகராட்சி ஒதுக்கியுள்ளது. பருவமழையை பொறுத்து, சாலை அமைக்கும் பணி துவங்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி