உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடிநீரில் கழிவுநீர் கலப்பு ரூ.4 கோடி திட்டப்பணி வீண்

குடிநீரில் கழிவுநீர் கலப்பு ரூ.4 கோடி திட்டப்பணி வீண்

பெரம்பூர், திரு.வி.க., நகர் மண்டலம், பெரம்பூர் அருந்ததி நகரில் உள்ள 16 தெருக்களிலும், 20 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டன. குழாய்கள் பழுதானதால், அவை மாற்றியமைக்க திட்டமிடப்பட்டது.இதற்காக, 4 கோடி ரூபாய் செலவில், கடந்தாண்டு ஆகஸ்டில் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் துவங்கின. மொத்தம் உள்ள 16 தெருக்களில், 13ல் புதிதாக குடிநீர் குழாய் பதிக்கப்பட்டன.பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில், தற்போது குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக அப்பகுதியினர் புகார் அளித்தனர். இதையடுத்து, அருந்ததி நகர் முழுதும் குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.குடிநீரில் கழிவுநீர் கலப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது அதை சரி செய்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆனால், பகுதிவாசிகள் இன்னும் எட்டு தெருக்களில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:கடந்த 2023 ஆகஸ்டில், வீரராகவன் தெருவில் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் துவங்கின. அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், குடிநீரில் வழக்கம் போல் கழிவுநீர் கலந்து வருகிறது. குறிப்பாக கந்தன் தெரு, ராங்கப்பன் தெரு, பங்காரு தெரு, பெரியபாளையத்தம்மன் தெரு மற்றும் சந்து, தாசரி தெருக்களில் குடிநீரில் கழிவுநீர் கலக்கிறது.இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்க வேண்டும். குழாய் பதிக்கும் பணியின் போது குடிநீர்வாரிய அதிகாரிகள் யாரும் நேரில் ஆய்வு செய்யவில்லை. முன் அனுபவம் இல்லாத ஒப்பந்ததாரரை கொண்டு பணிகளை முடித்துள்ளனர். இதனால் பணமும் வீணாகியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை