மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற வாலிபர் கைது
25-Nov-2024
திருவள்ளூர்,:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது மேல்நல்லாத்துார். இங்கு குறைந்த அழுத்த மின்சாரத்தால் பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து மணவாளநகர் மின்வாரிய அதிகாரிகள் இப்பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு வாரத்திற்கு முன் இப்பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் அருகில் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய மின்மாற்றி அமைத்தனர்.நேற்று முன்தினம் காலை மின்மாற்றிக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணிக்கு மின்வாரிய ஊழியர்கள் வந்த போது மின்மாற்றி மாயமானது.இதையடுத்து அப்பகுதியில் தேடிய போது மின்மாற்றியை திருடிச் சென்ற மர்ம நபர்கள் பெட்டியை சேதப்படுத்தி அதிலிருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பர் கம்பிகள் மற்றும் மின்சார பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து மணவாளநகர் மின்வாரிய உதவி பொறியாளர் லட்சுமிகாந்தன் கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
25-Nov-2024