உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.6.60 லட்சம் கஞ்சா பறிமுதல்

ரூ.6.60 லட்சம் கஞ்சா பறிமுதல்

அம்பத்துார்: அம்பத்துாரில், 6.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.அம்பத்துார், பட்டரைவாக்கம் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக, அம்பத்துார் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு, நேற்று அதிகாலை தகவல் கிடைத்தது. அதன்படி, இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அங்கு சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து, அவரது பையை சோதனை செய்தனர். அதில் கஞ்சா இருப்பது தெரிந்தது. விசாரணையில், அம்பத்துார், ஞானமூர்த்தி நகரைச் சேர்ந்த சீனு, 23, என்பதும், அம்பத்துார் காவல் நிலையத்தில், இவர் மீது கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி, கஞ்சா உட்பட பல வழக்குகள் உள்ளதும் தெரிய வந்தது.ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, அம்பத்துார் சுற்றுவட்டாரத்தில் விற்பனை செய்து வந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார், 6.60 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 33 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ