உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லேடீஸ் கிளப் வசமிருந்த ரூ.8 கோடி இடம் மீட்பு

லேடீஸ் கிளப் வசமிருந்த ரூ.8 கோடி இடம் மீட்பு

அண்ணா நகர்: அண்ணா நகரில், 8 கோடி ரூபாய் மதிப்பிலான மாநகராட்சி இடத்தை, அதிகாரிகள் நேற்று மீட்டனர்.அண்ணா நகர் கிழக்கு, குமரன் நகர் மூன்றாவது குறுக்கு தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான 5,000 சதுரடி இடம், 'அண்ணா நகர் லேடீஸ் கிளப்'புக்கு, 30 ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டிருந்தது.நான்கு ஆண்டுகளுக்கு முன் குத்தகை காலம் முடிந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், கிளப்பை சேர்ந்தோரை வெளியேறும்படி தெரிவித்தனர்.https://x.com/dinamalarweb/status/1946765060464144700அவர்கள் காலி செய்ததை அடுத்து, மண்டல அதிகாரி சுந்தரராஜன் தலைமையிலான மாநகராட்சியினர் நேற்று அந்த இடத்தை மீட்டு, பூட்டு போட்டனர். இந்த இடத்தில் அத்துமீறி நுழைந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை பதாகை அமைத்துள்ளனர்.மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு 8 கோடி ரூபாய் என மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N Sasikumar Yadhav
ஜூலை 20, 2025 14:53

லயோலா காலேஜ் ஆக்கிரமிப்பு செய்திருக்கிற இடத்தையும் மீட்டு அந்த இடத்துக்கு சொந்தக்காரரான சிவனிடம் ஒப்படைத்தால் நன்றாக இருக்கும். கர்த்தரின் தயவால் ஆட்சிக்கு வந்த இந்துக்களுக்கு மட்டும் விடியாத திராவிட மாடல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்


முக்கிய வீடியோ