உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டேபிள் டென்னிஸ் போட்டி சாய்ராம் கல்லுாரி அணி சாம்பியன்

டேபிள் டென்னிஸ் போட்டி சாய்ராம் கல்லுாரி அணி சாம்பியன்

சென்னை: அண்ணா பல்கலை மண்டல டேபிள் டென்னிஸ் போட்டியில், இருபாலரிலும் சாய்ராம் பொறியியல் கல்லுாரி அணி முதலிடத்தை பெற்றது. அண்ணா பல்கலையின் நான்காவது மண்டல டேபிள் டென்னிஸ் போட்டி, சாய்ராம் கல்விக்குழுமம் சார்பில், மேற்கு தாம்பரத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இருபாலரிலும் 19 அணிகள் பங்கேற்றன. இதில், ஆண்களுக்கான இறுதிப் போட்டியில், சாய்ராம் பொறியியல் கல்லுாரி மற்றும் சாய்ராம் இன்ஸ்டிடியூட் கல்லுாரி அணிகள் மோதின. அதில், 3 - 0 என்ற கணக்கில் சாய்ராம் பொறியியல் கல்லுாரி அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தனலட்சுமி பொறியியல் கல்லுாரி, டேனிஷ் கல்லுாரி அணிகள் மூன்று மற்றும் நான்காம் இடங்களை வென்றன. அதே வளாகத்தில் நடந்த பெண்களுக்கான போட்டியில், சாய்ராம் பொறியியல் கல்லுாரி முதலிடத்தையும், சாய்ராம் இன்ஸ்டிடியூட் கல்லுாரி இரண்டாமிடத்தையும் கைப்பற்றின. குரோம்பேட்டை எம்.ஐ.டி., கல்லுாரி மற்றும் தனலட்சுமி கல்லுாரி அணிகள், முறையே மூன்று மற்றும் நான்காம் இடங்களை வென்றன. போட்டியில், வெற்றி பெற்ற அணிகளுக்கு சாய்ராம் கல்லுாரிகளின் முதல்வர்கள் ராஜேந்திர பிரசாத், பழனிகுமார் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். உடன் சாய்ராம் கல்லுாரியின் உடற்கல்வி இயக்குநர் குமார் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை