உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆவடி மேயர் வார்டு சாலையில் சுகாதார சீர்கேடு

ஆவடி மேயர் வார்டு சாலையில் சுகாதார சீர்கேடு

ஆவடி, ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயில் 9 வார்டு, பிருந்தாவன் தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேயர் உதயகுமார் வார்டான இங்கு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தார்ச்சாலை அமைக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து சாலையின் இருபுறமும், பள்ளம் தோண்டி மின் கேபிள் புதைக்கப்பட்டது. அதன் பின் சாலை சீரமைக்கப்படவில்லை.இதன் காரணமாக, சாலை குண்டும் குழியுமாக மாறியது. அதேபோல, அங்குள்ள தனியார் இடத்தில் தேங்கியுள்ள மழை நீர் மற்றும் அப்பகுதிவாசிகள் வெளியேற்றும் கழிவு நீரால் சாலை மேலும் மோசமடைந்துள்ளது.இது குறித்து மேயர் மற்றும் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை