மேலும் செய்திகள்
ஊரகத்துறை அலுவலர்கள் வலியுறுத்தல்
13-Mar-2025
சென்னை:சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. அந்த இடத்திற்கு மாற்றாக, திருவல்லிக்கேணியில், எம்.எல்.ஏ., விடுதிக்கு பின்புறம் சிவானந்தா சாலையில் உள்ள ஒரு இடத்தை போலீசார் ஒதுக்கி உள்ளனர்அந்த இடத்தில், தமிழ்நாடு துாய்மை தொழிலாளர் நல சங்கத்தினர், அதன் தலைவர் சக்திவேல் தலைமையில், நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஊராட்சி மன்ற தலைவர்களால் பணி நியமனம் செய்யப்பட்ட தொகுப்பு ஊதிய துாய்மை பணியாளர்களுக்கு, சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு மேல், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் துாய்மை பணியாளர்களுக்கு, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
13-Mar-2025