உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சவீதா விளையாட்டு திருவிழா சென்னை பள்ளிகள் அசத்தல் விளையாட்டு செய்திகள்

சவீதா விளையாட்டு திருவிழா சென்னை பள்ளிகள் அசத்தல் விளையாட்டு செய்திகள்

சென்னை, சவீதா பொறியியல் கல்லுாரி சார்பில், சவீதா தேசிய விளையாட்டு திருவிழா, தண்டலத்தில் உள்ள சவீதா கல்லுாரி வளாகத்தில் நடந்தது.பள்ளிகளுக்கு இடையில் இப்போட்டியில் மாணவியர் கோ - கோவில், முகப்பேர் வேலம்மாள் பள்ளி முதலிடத்தையும், பொன்னேரி வேலம்மாள் இரண்டாம் இடத்தையும் பிடித்தன.மாணவருக்கான பேட்மின்டனில் ராணிபேட்டை இஸ்லாமியா ஆண்கள் பள்ளி முதலிடத்தையும், சிட்லபாக்கம் லயோலா மெட்ரிக் பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.மாணவியருக்கான பேட்மின்டனில் ஆவடி பி.எம்.,கேந்திரா வித்யாலயா, ராணிபேட்டை லிட்டில் பிளவர் பள்ளி, முதல் இரண்டு இடங்களை கைப்பற்றின. மாணவருக்கான வாலிபாலில், சென்னை ஒய்.எம்.சி.ஏ., பள்ளி முதலிடமும், சென்னை டான்பாஸ்கோ பள்ளி இரண்டாம் இடத்தையும் கைப்பற்றின.மாணவருக்கான கபடியில், சென்னை ராஜா முத்தையா பள்ளி முதலிடமும், சென்னை அரசு பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை