உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எஸ்.பி.ஐ., வீட்டுவசதி கண்காட்சி மக்களிடையே அமோக வரவேற்பு

எஸ்.பி.ஐ., வீட்டுவசதி கண்காட்சி மக்களிடையே அமோக வரவேற்பு

சென்னை, டிச. 5- நந்தம்பாக்கத்தில் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் நடத்தப்பட்ட வீட்டுவசதி கண்காட்சிக்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.'எஸ்.பி.ஐ., டிரீம் ேஹாம் எக்ஸ்போ' என்ற பெயரில், இரண்டு நாள் வீட்டுவசதி கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மக்களின் வருகை அதிகமாக இருந்ததால், மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டு, டிச., 2ல் நிறைவடைந்தது.இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான 'கிரெடாய்' உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் உறுப்பினர்களாக உள்ள, 35 கட்டுமான நிறுவனங்களின், 400க்கும் மேற்பட்ட கட்டுமான திட்டங்களின் விபரங்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டன.இந்த கண்காட்சி துவக்க விழாவில், 'கிரெடாய்' அமைப்பின் தேசிய துணை தலைவர் எஸ்.ஸ்ரீதரன், 'கிரெடாய்' சென்னை பிரிவு தலைவர் முகமது அலி, எஸ்.பி.ஐ., சென்னை வட்ட பொது மேலாளர் எம்.வி.ஆர்.முரளி கிருஷ்ணா, எஸ்.பி.ஐ., சென்னை துணை பொது மேலாளர் ரோஹித் கமல் ஷாஹா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ