உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எஸ்.பி.ஐ.ஓ.ஏ., குடியிருப்பில் அனைத்து வசதிகளும் உள்ளன குடியிருப்போர் நல சங்கம் விளக்கம்

எஸ்.பி.ஐ.ஓ.ஏ., குடியிருப்பில் அனைத்து வசதிகளும் உள்ளன குடியிருப்போர் நல சங்கம் விளக்கம்

சென்னை, சென்னை மாம்பாக்கத்தில் உள்ள எஸ்.பி.ஐ.ஓ.ஏ., குடியிருப்பு வளாகத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதாக, அந்த வளாக குடியிருப்போர் நலச்சங்கம் தெரிவித்துள்ளது. எஸ்.பி.ஐ.ஓ.ஏ., யூனிட்டி என்கிளேவ் உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் கே.சிவஞானம் அளித்துள்ள விளக்க அறிக்கை: எஸ்.பி.ஐ.ஓ.ஏ., குடியிருப்பு வளாகத்தில் அடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்படவில்லை என்று வெளியான தகவல்கள் துரதிருஷ்டவசமானவை. இத்தகவல், எங்கள் குடியிருப்பு மீதான நன்மதிப்பை குறைக்கும் வகையில் அமைந்துள்ளன. இங்கு, 24 மணி நேரமும் செயல்படும் வகையில், 69 லிப்டுகள் உள்ளன. இவை ஏழு ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளன. இந்த வளாகத்தில், 1,875 வீட்டு உரிமையாளர்களுக்கும் கார் நிறுத்துவதற்கான இடம் ஒதுக்கப்பட்டு, அதற்கான கடிதங்கள் உரியவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இங்கு, 45,600 சதுர அடி பரப்பளவுக்கு, 'கிளப் ஹவுஸ்' கட்டி முடிக்கப்பட்டு வீட்டு உரிமையாளர்கள் பயன்பாட்டில் உள்ளது. இத்துடன், 85,600 சதுர அடி பரப்பளவுக்கு வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்டு, வீட்டு உரிமையாளர்கள் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை வசதிகள் முழுமையாக செயல்பாட்டில் உள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை