மேலும் செய்திகள்
'விடுங்க தோழா... பாத்துக்கலாம்!'
24-Sep-2024
அடையாறு, சென்னை குடிநீர் வாரியத்தில், 13.96 லட்சம் பேர் வரியும், 9.13 லட்சம் பேர் கட்டணமும் செலுத்துகின்றனர்.இதன் வாயிலாக, ஆண்டுக்கு, 895 கோடி ரூபாய் வசூலாக வேண்டும். இம்மாதம், 30ம் தேதிக்குள் வரி செலுத்த வேண்டும் என, வாரியம் வலியுறுத்தி உள்ளது.அதேபோல், பல ஆண்டுகளாக வரி செலுத்தாத கட்டடங்கள் மீது, சீல், ஜப்தி நடவடிக்கை எடுக்க, ஒரு துணை ஆட்சியர் தலைமையில், 7 தாசில்தார்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் வாயிலாக, சென்னை முழுவதும், வணிக கட்டடங்களுக்கு 'சீல்' நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அந்த வகையில், அடையாறு மண்டலம், 168வது வார்டு, கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் 11 தொழில் நிறுவனங்கள், 9.50 லட்சம் ரூபாய் வரி செலுத்த வேண்டி உள்ளது. குடிநீர் வாரியம் பல முறை 'நோட்டீஸ்' வழங்கியும், அவர்கள் வரி செலுத்தவில்லை. இதையடுத்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் குழுவினர் நேற்று, 11 நிறுவனங்களுக்கும், 'சீல்' வைத்தனர்.
24-Sep-2024