உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாதையை ஆக்கிரமித்த கட்டடத்திற்கு சீல்

பாதையை ஆக்கிரமித்த கட்டடத்திற்கு சீல்

சென்னை பொது பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடத்திற்கு, மாநகராட்சி அதிகாரிகள், 'சீல்' வைத்துள்ளனர்.கீழ்ப்பாக்கம், தியாகப்பா தெருவில், பொது பாதையை ஆக்கிரமித்து, வீடு கட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அப்பகுதி மக்கள் அளித்த புகாரில், மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தில் மனு அளித்தனர்.அதைத்தொடர்ந்து, ஆக்கிரமிப்பு மீது நடவடிக்கை எடுக்கவும், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், முறைமன்ற நடுவர் மாலிக் பெரோஸ்கான் உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து, அண்ணா நகர் மண்டலம் 100வது வார்டில் உள்ள பொது பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீட்டிற்கு, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் உத்தரவுப்படி, அதிகாரிகள் நேற்று,'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ