உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விதிமுறை மீறி கட்டிய குடியிருப்புகளுக்கு சீல்

விதிமுறை மீறி கட்டிய குடியிருப்புகளுக்கு சீல்

பள்ளிக்கரணை,பெருங்குடி மண்டலம், பள்ளிக்கரணை, தங்கராஜ் தெருவில், டிரீம் ஹோம்ஸ் பில்டர்ஸ் எனும் பெயரில், அன்சாரி என்பவர், இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வருகிறார்.அந்த குடியிருப்பை சுற்றி, நான்குபுறமும் சி.எம்.டி.ஏ.,வின் விதிமுறைப்படி போதிய இடைவெளி விடவேண்டும். ஆனால், சிறு இடைவெளி கூட விடாமல், விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.இதையடுத்து, மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு, நோட்டீஸ் வழங்கினர்.இந்நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் 'சீல்' வைத்து நோட்டீஸ் ஒட்டிச்சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை