பயங்கரவாதிகளை பிடிக்க கடற்பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை
காசிமேடு, நாட்டின் கடல் வழி பாதுகாப்பை உறுதி செய்ய ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் 'சாகர் கவாச்' பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.வடசென்னையில் காவல் துறை மற்றும் அதிவிரைவு படை, கடலோர காவல் படையினர் இணைந்து, இந்த ஒத்திகை நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.ராயபுரம், காசிமேடு, காசிமேடு மீன்பிடி துறைமுகம், புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் நேற்றும், இன்றும் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.படகில் பயங்கரவாதிகள் போர்வையில் வருவோரை பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைப்பது போன்று பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதில் 15 ஆய்வாளர்கள், 75 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட போலீசார் என, 300க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.