உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மயங்கி விழுந்து காவலாளி பலி

மயங்கி விழுந்து காவலாளி பலி

சென்னை, பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி., நகர் பேருந்து நிறுத்தத்தில் மயங்கி விழுந்து, காவலாளி பலியானார். பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன், 68; தனியார் நிறுவன காவலாளி. இவர், இரவு பணி முடிந்து நேற்று நேற்று காலை வீட்டிற்கு செல்ல, சாந்தோம் நெடுஞ்சாலை வழியாக திரும்பிக் கொண்டிருந்தார். எம்.ஆர்.சி., பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தோர், ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். பட்டினப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை