உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குடியிருப்பு மாடியை ஆக்கிரமித்து அட்டூழியம் வி.சி., பிரமுகர் உட்பட ஏழு பேர் கைது

குடியிருப்பு மாடியை ஆக்கிரமித்து அட்டூழியம் வி.சி., பிரமுகர் உட்பட ஏழு பேர் கைது

பள்ளிக்கரணை, பள்ளிக்கரணையில் புதிதாக கட்டப்பட்ட, அடுக்குமாடி குடியிருப்பு மாடியை ஆக்கிரமித்து, கூரை அமைத்த வி.சி., பிரமுகர் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.பள்ளிக்கரணை, காமகோடி நகரில் கீர்த்தி முருகாஸ் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. கமலஹாசன் என்பவர் இதைக் கட்டி, முதல் தளத்தில் தன் அலுவலகத்தை நடத்தி வருகிறார்.இரண்டாவது தளத்தில் உள்ள, 'எஸ் 2' வீட்டில் வி.சி., பிரமுகர் செல்வகுமார், 36, என்பவர், வாடகைக்கு இருந்துள்ளார். அந்த வீட்டை ரம்யா சுதர்சன் என்பவர் வாங்கியுள்ளார்.மற்ற வீடுகளை கட்டுமான உரிமையாளர் கமலஹாசன் விற்க முயன்றபோது, செல்வகுமார் விற்க விடாமல் இடையூறு செய்து, அனைத்து வீடுகளையும் தனக்கு வாடகைக்கு கொடுக்கும்படி மிரட்டிஉள்ளார்.தவிர, மாடியில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைத்து, அதில் தன் நண்பர்களோடு சேர்ந்து, தினமும் மது அருந்தி, சீட்டு விளையாடி தொல்லை தந்துள்ளார். வீட்டை வாங்க வருவோரை நாயை ஏவிவிட்டு அச்சுறுத்தி உள்ளார்.கடந்த ஜன., 1ல், வீட்டின் மேல் மாடியை புகைப்படம் எடுக்க சென்ற கமலஹாசனின் ஆட்களை, வி.சி., பிரமுகர் உள்ளிட்ட ஏழு பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். தட்டிக்கேட்ட கமலஹாசனையும் தாக்கி, பல்லை உடைத்துள்ளனர். அவர், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.இதுகுறித்து, பள்ளிக்கரணை போலீசார் வழக்குப் பதிந்து தமிழரசன், 28, சுதாகர், 37, ஆகியோரை, ஏற்கனவே கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த வி.சி., பிரமுகர் செல்வகுமார், 36, பரத், 27, கோவிந்தராஜ், 39, ஜெபர்சன், 42, ராகேஷ், 38 உள்ளிட்ட, ஐந்து பேரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை