உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏமாற்றிய நபரை கடத்திய சபல மாணவர்கள்

ஏமாற்றிய நபரை கடத்திய சபல மாணவர்கள்

சென்னை, பிரபல கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் மூவர், வார இறுதி நாளை கொண்டாடுவதற்காக, புதுச்சேரி செல்ல திட்டமிட்டனர். இதற்காக 'ஆன்லைன்' செயலி மூலம் மூன்று அழகிகளை 'புக்' செய்து, 1.50 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளனர்.இவர்களை எழும்பூரைச் சேர்ந்த புரோக்கர் கபீர் தொடர்பு கொண்டு, புதுச்சேரியில் அழகிகள் உங்களை தேடி வருவர் எனக் கூறியுள்ளார். ஆனால், யாரும் வரவில்லை. ஆத்திரமடைந்த மாணவர்கள், எழும்பூரில் உள்ள கபீரை, அவரது வீட்டில் இருந்து காரில் கடத்தினர். தகவலறிந்த போலீசார் காரை மடக்கி, கபீரை மீட்டனர். மாணவர்கள் தினேஷ் குமார், 20, அப்சல் அலி, 20, வசந்தகுமார், 20, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ