கழிவுநீர் பிரச்னை புகார் எண் வெளியீடு
சென்னை, மெட்ரோ ரயில் பணிக்காக, மாதவரம் மற்றும் மூலக்கடை பகுதியில், கழிவுநீர் உந்து குழாய் மாற்றி இணைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால், இன்றும், நாளையும் மாதவரம், திரு.வி.க., நகர், அம்பத்துார், அண்ணா நகர் ஆகிய மண்டலங்களில் உள்ள, கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது. கழிவுநீர், இயந்திர நுழைவாயில் வழியாக வெளியேறினால் லாரிகள் கொண்டு அகற்றப்படும். இதற்கு, குடிநீர் வாரியத்தின் அந்தந்த வார்டு பொறியாளர்கள் மற்றும்பகுதி பொறியாளர்களை தொடர்பு கொள்ள வேண்டும். மேலும், விபரங்களுக்கு 044 -4567 4567 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.