உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கணவர் இறந்த அதிர்ச்சி மனைவி தற்கொலை

கணவர் இறந்த அதிர்ச்சி மனைவி தற்கொலை

கொளத்துார், வியாசர்பாடி, கவுதமபுரம் குடியிருப்பில் வசித்தவர் சாந்தகுமார், 50. கடந்த 22ம் தேதி திடீரென மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்ட சாந்தகுமார் இறந்து போனார். கணவர் இறந்த துக்கத்தில் இருந்த அவரது மனைவி கவிதா, 46. நேற்று முன்தினம் மாலை, குடியிருப்பின் ஒன்பதாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மற்றொரு சம்பவம்

கொளத்துார், பூம்புகார் நகரைச் சேர்ந்தவர் ஜெகன், 48. இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை இல்லை. நேற்று முன்தினம் அதிகாலை திடீரென உடல்நலம் குன்றிய ஜெகனை, பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே ஜெகன் இறந்துள்ளார். கணவன் இறந்த துக்கம் தாளாமல்,நேற்று காலை 10:30 மணியளவில் வீட்டில் மின்விசிறியில் துாக்கிட்டு மகேஸ்வரி தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து ராஜமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை